பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய நடை if 3 துரியோதனனும் மாமனை நெஞ்சொடு சேரக் கட்டிக் கொண்டு பேசுகின்றான்: "என்துயர் தீர்த்தா யடா! - உயிர்மாமனே ஏளனந் தீர்த்து விட்டாய். அன்று நகைத்தா ளடா!-உயிர்மாமனே! அவளை என் ஆளாக்கி னாய், என்றும், மறவேனடா!-உயிர்மாமனே! என்னகைம் மாறு செய்வேன்? ஆசை தணித்தாயடா? - உயிர்மாமனே! ஆவியைக் காத்தாயடா! பூசை புரிவோ மடா!-உயிர்மாமனே! பொங்கலுனக் கிடுவோம்! நாச மடைந்த தடா!- நெடுநாட்டகை, நாமினி வாழ்ந்தோ மடா! பேசவுந் தோன்று தில்லை:-உயிர்மாமனே! பேரின்பங் கூட்டி விட்டாய்”. உலக அநுபவத்தையுடைய கவிஞர் இக்கால ஆரவாரத்தைவெற்றிக் களிப்பை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்த ஏற்ற நடையைக் கையாண்டுள்ளார். சாதாரண மக்கள் பேச்சில் எடுத்தாளப்பெறும் பழ மொழிகளும் உவமைகளும் சொற்றொடர்களும் இவர்தம் காவிய நடைக்கு உயிர்ப்பூட்டுகின்றன. இராசசூயப் பெரு வேள்வி நடைபெற்றபோது தருமனுக்கு வந்து குவிந்த பெருமைகளையெல்லாம் எண்ணிப் புழுங்கிப் பொறாமைப் படுகின்ற துரியோதனன் பேச்சில் வரும், குப்பை கொலோ முத்தும்?-அந்தக் குரைகடல் நிலத்தவர் கொணர்ந்து பெய்தார் ւյրr-8