பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத்தில் உருக்காட்சிக்ள் 121 “எத்தனை வ டி வ ம் நீலப் பொய்கைகள்: நீலவன்ன மொன்றில் எத்தனை வகையடி!' எத்தனை செம்மை: 'பசுமையும் கருமையும் எத்தனை கரிய பெரும் பூதம்' 'நீலப் பொய்கையின் மிதந்திடும் தங்கத் தோணிகள்', 'சுட ரொளிப் பொற்கரையிட்ட கருஞ்சிகரங்கள்! தங்கத் திமிங் கலம் தாம்பல மிதக்கும் இருட்கடல்!” என்று படுஞாயிற்றின் மேகச் சூழலை அற்புதமாகக் காட்டுவதைக் கண்டு களிக்க லாம், இவற்றில் வண்ண, வடிவக் கட்புல உருக்காட்சிகள் கவிதையைப் பொலிவுறச் செய்வதைக் காண்க. காவியத்தின் தொடக்கத்தில் வரும் சரசுவதி வணக்கத் தில் கலைமகளை வருணிக்கும் கவிதைப் பகுதியில் வரும் வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்', வேதத் திருவிழியாள்,-அதில் மிக்கபல் லுரையெனும் கருமையிட்டாள், சீதக் கதிர்மதியே-நுதல் சிந்தனை யேகுழல் ஒன்றுடையாள்" இவற்றில் வண்ண, வடிவக் கட்புல உருக்காட்சிகட்ளைக் கண்டு மகிழ்க அத்தினபுரத்தை வருணிக்கும் கவிதைப் பகுதி யில் வெள்ளைப் பனிவரைபோற் பலமாளிகை’, ‘முத்தொளிர் மாடங்கள். நத்தியல் வாவிகள் என்பனவும் வண்ண வடிவ உருக் காட்சிகளாகும். இராசசூயப் பெருவேள்வி நடை பெற்றபொழுது பாண்டவர்கட்கு வந்து குவிந்த காணிக்கைப் பொருள்களை அரவக் கொடியோன் பட்டியலிட்டுக் காட்டும் பகுதியில் வரும், ஆணிப்பொற் கலசங்களும்--ரவி யன்னநல் வயிரத்தின் மகுடங்களும் மாணிக்கக் குவியல்க ளும்-பச்சை மரகதத் திரளும்நன் முத்துக்க ளும் 4 டிெ. டிெ 1, 2, 3