பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பாஞ்சாலி சபதம் பூனிட்ட திருமணிதாம்-பல புதுப்புது வகைகளிற் பொலிவனவும்" என்ற கவிதைப்பகுதியிலும் இத்தகைய உருக்காட்சிகள் திகழ் வதைப் பார்க்கலாம். இன்னும் பல இடங்களில் இவை பொலிவுறுவதையும் கண்டு மகிழலாம். செவிப்புல உருக்காசிட்கள் : பாரதியாரின் முருகியல் நோக்கு செவிப்புல உருக்காட்சிகளைப் படைப்பதிலும் செல்லுகின்றது. மந்திர கீதங்களாம்:-தர்க்க வாதங்களாம். இவை அத்தினபுர வருணனையைக் கூறும் இடத்தில் வருபவை. இவற்றைப் படிக்கும்போது நம் மனக் காது ‘மந்திர கீதங்களைக் கேட்கின்றது; பட்டிமன்றம் போன்ற அமைப்பில் நடைபெறும் தர்க்க வாதங்களையும் கேட் கின்றது. விதுரனின் தூதுச் செய்தியால் சூதுபற்றிய சதியை அறிந்ததும் வீமன் திகைத்து நிற்கின்றான். தருமபுத்திரன் ஆணைப்படி படை முதலியவற்றை ஆயத்தம் செய்யப் புகுந்தவனின் சினத்தைக் காட்டும் கவிஞர், ‘தாமதம் செய்வோமோ?--செலத் தகுத்தகும் என்இடி புறநகைத் தான் என உரைப்பதில் வீமனின் இடிக்குரல் நம் மனக்காதில் விழுகின்றது தருமன் கவறாடலை மறுக்கும்போது சகுனி யின் ஏச்சினைக் காட்ட வந்த கவிஞர், கலகல வெனச்சிரித் தான்-பழிக் கவற்றையோர் சாத்திர மெனப்பயின் றோன் என்று கூறுவதில் சகுனியின் சிரிப்பொலியைக் கேட்கின்றோம். விதுரனை வீட்டை விட்டு வெளியேறுமாறு துரியோதனன் 5, ബ്ലൂ.. 1.5:23