பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத்தில் உருக்காட்சிகள் 127 "நீரமுதம் எனப்பாய்ந்து நிரம்பும் நாடு’ கைப்பிடி கொண்டு சுழற்றுவோன்-தன் கணக்கிற் சுழன்றிடும் சக்கரம்." "கிரி வகுத்த ஒடையிலே மிதந்து செல்லும், "அடிவானத் தேஅங்கு பரிதிக் கோளம் அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்’ வடிவான தொன்றாகத் தகடி ரண்டு வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய்’ "இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்; இடையின்றிக் கதிர்களெலாம் சுழலுமென வானூலார் இயம்பு கின்றார்' இவண் காட்டியுள்ள அடிகளிலெல்லாம் இயக்கநிலை உருக் காட்சிகள் தென்படுவவைக் காணலாம், கலவை நிலை உருக்காட்சிகள்: சில பாடல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பல்வேறு வகை உருக்காட்சிகள் அமைந்து கவிதைக்குப் பொலிவூட்டி முருகுணர்ச்சியை மிகு விக்கின்றன. அன்னங்கள் பொற்கமலத் தடத்தின் ஊர அளிமுரலக் கிளிமழலை அரற்றக் கேட்போர் கன்னங்கள் அமுதுற குயில்கள் பாடும் காவினத்து நறுமலரின் கமழைத் தென்றல் பொன்னங்க மணிமடவார் மாட மீது புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச வன்னங்கொள் வரைத்தோளார் மகிழ மாதர் மையல் விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு” 8. டிெ 1, 17:117