பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$36 பாஞ்சாலி சபதம் என்றும், பொது மறையில் காணப்பெறும், வள்ளுவரின் வாய்மொழிகளையும் நாம் சிந்திக்கின்றோம். கவறாட வின் கொடுமை: கவிஞர் தருமனைக் கொண்டு இதனைப் பேசச் செய்கின்றார். ஆயினும், அவனே சூதாட் டத்தில் இறங்கி பலியாவதையும் காட்டுகின்றார். அறத் தோன்றலையே கவறாடலுக்குத் திருப்புவதில் சகுனியைச் சிறந்த சமர்த்தனாக்குகின்றார். மன்னர் சூதாட வல்லுக் கழைத்தபோது மறுப்பதில்லை. வாட்போரிலும் சாத்திரப் போரிலும் வல்லவன் வெல்வான்; வன்மை இல்லாதவன் தோற்றிடுவான். இது சதியன்று. நல்லவன், அல்லாதான் என்ற மரபு இங்கு இல்லை. வல்லமர் செய்ய மன்னர் அவை முன் நின்னை அழைத்துவிட்டேன். வருவ துண்டேல் சொல்லுக துணிவின்றேல் அதனையும் கூறுக’ என்கின்றான் சகுனி, சிலம்பில் விதி வெல்வதைக் காண்பதைப்போல் இங்கும் விதி வெல்வதைக் காண்கின்றோம். தருமன் சூதிற்கு இணங்குகின்றான். மெய்ய றிந்தவர் தம்மு ளுயர்ந்தோன் விதியினாலத் தருமனும் வீழ்ந்தான்" என்கின்றார். மேலும் அவர், மதியி னும்விதி தான்பெரி தன்றோ? வைய மீதுள வாகு மவற்றுள் விதியினும்பெரி தோர்பொரு ளுண்டோ? மேலை நாம்செய்யுங் கர்மமல் லாதே, நதியிலுள்ள சிறுகுழி தன்னில் நான்கு திக்கி லிருந்தும் பல்மாசு பதியுமாறு, பிறர்செய்யுங் கர்மப் பயனும் நம்மை அடைவதுண்டன்றோ?" 8. பா. ச. 2. 36:181 9. டிெ 2. 36; 182