பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பாஞ்சாவி சபதம் தம்பி மக்கள் பொருள் வெஃகு வாயோ சாதற் காண வயதினில் அண்ணே! நம்பி நின்னை அடைந்தவ ரன்றோ? நாத னென்றுனைக் கொண்டவ ரன்றோ? எம்பி ராணுளங் கொள்ளுதி யாயின் யாவுந் தான மெனக்கொடுப் பாரே, கும்மி மாநர கத்தினி வாழ்த்துங் கொடிய செய்கை தொடர்வது என்னே? நெறிஇ ழந்தபின் வாழ்வதி வின்பம் நேரு மென்று நினைத்திடல் வேண்டா பொறிஇ ழந்த சகுனியின் சூதால் . புண்ணி யர்தமை மாற்றல ராக்கிச் சிறியர் பாதகர் என்றுல கெல்லாம் 'சி' என்றேச உகந்தர சாளும் வறிய வாழ்வை விரும்பிட லாமோ? வாழி சூதை நிறுத்துதி” என்கின்றான். குத்திக் காட்டுவது போல், முத்தாய்ப்பாக, "கேட்கும் காதும் இழந்து விட்டாயோ?” என்று கேட்கின் றான: நாட்டைப் பணயமாக வைத்து இழந்ததும் கவிஞரின் சினம் கொடுமுடியை எட்டி விடுகின்றது. கதை கூறும் கவிஞர் தம்மை மறந்து கதை மாந்தருள் ஒருவராகி விடுகின் றார்; அவரது உணர்ச்சி கட்டறுத்துக் கொண்டுசெல்கின்றது. பேசுகின்றார்: 10. டிெ, 2. 38: 199, 200, 202, 204 11. டிெ, 2. 38; 20;