உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 5 அதாவது, கதை பொது மக்கள் நன்றாக அறிந்து அவற்றில் தோய்ந்ததாக இருத்தல் வேண்டும். மானிட வாழ்க்கையின் உண்மைகள் அடங்கிய ஒரு கட்டுக் கதை-அல்லது புராணக் கதை-காவியத்திற்குச் சிறந்ததாக அமையலாம். ஜூலியஸ் சீஸர் என்ற பெயரை எண்ணும்பொழுதே மக்கள் மனத்தில் எழும் கருத்துகள் யாவும் மக்களுக்கு மிகமிக முக்கியமான வைதாம். அதனால் சாத்தானைக் கருதும்பொழுது மனத்தில் எழும் கருத்துகளும் முக்கியமானவையே. இம் முறையில் சாத்தான் சீலரைப் போலவே உண்மையான கதை மாந்தன் தான். ஆகவே, மானிட வாழ்வின் அநுபவ சம்பந்தப்பட்ட ஒரு கதையைக் கற்பனை செய்வது கவிஞனொருவனால் சாத்தியப்படக் கூடியதே. அவன் கொள்ள வேண்டிய தெல்லாம் மனித அநுபவமே: ஒவ்வொருவரும் அறிந்து விவாதிக்க முடியாததும், யாவரும் ஒப்புக் கொள்ளக் கூடியது மான வாழ்க்கை அநுபவமே' இந்த முறையில் நோக்கினால் பாரதி எல்லோருக்கும் தெரிந்த ஒர் இதிகாசக் கதையைத் தான் தேர்ந்தெடுத்துள்ளார். இக்கதையின்மூலம் மக்களுக்கு உணர்த்த வேண்டிய ஒர் உண்மைப் பொருள் அறம் வெல் லும்; பாவம் தோற்கும் என்பது." தொடக்கத்தில் தீயவர் கள் வெற்றியடைவதுபோல் காணப்படினும் இறுதியில் நல்லவர்கள்தாம் அறத்தின் பயனை அநுபவிப்பது உறுதி என்பது பாரதி காட்ட வந்த உண்மை. பாரதியார் பாடல்களில் என்றும் நிலைக்கும் தகுதி பெற்ற ஒரு சிலவற்றுள் பாஞ்சாலி சபதம் என்ற இச்சிறு காவியமும் ஒன்று. தொடர்நிலைச் செய்யுள்’ என வழங்கப் பெறும் காவியப் படைப்பில்தான் ஒருவரின் புலமை வெளிப்

مستعميمmمصمميم

9. Las celles Aberreombie : The Epic - uż 55-56 . 10. இந்நூல் இயல்-12 இல் இது விரிவாக விளக்கப் பெறுகின்றது.