பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 பாஞ்சாலி சபதம் ஒரஞ் செய்தி டாமே-தருமத் துறுதி கொன்றி டாமே சோரஞ் செய்திடாமே-பிறரைத் துயரில் வீழ்த்தி டாமே ஊரை யாளு முறைமை-உலகில் ஒர்புறத்து மில்லை’ என்று கூறும் போதே கவிஞரின் சினம் தணிந்து விடுகின்றது தாம் கதை கூறுபவர் என்ற நினைவும் வந்துவிடுகின்றது. சார மற்றவார்த்தை-மேலே சரிதை சொல்லு கின்றோம்" என்று கதையைத் தொடர்கின்றார். கவறாடலின்கொடுமையைத்தருமன் எங்ங்னம் அநுபவித் தான்? அனைத்தையும் இழந்த பிறகு தம்பியரையும் தன் மனைவியயுைம் இழந்து உலகப் பழிக்கு ஆளாகின்றான். சிறுமை பலசெய்து சீரழிக்குஞ் சூதின் வறுமை தருவதொன் றில்’’. என்ற வள்ளுவத்திற்குச் சரியான இலக்கியமாகின்றான். இதனால் அரசவையில் பெருத்த அவமானம், பன்னிரண் டாண்டுகள் காடுறை வாழ்க்கை, ஒராண்டு கரந்துறை வாழ்க்கை இவனுக்குக் கிடைத்த பரிசுகள்! ஊழின் பெருவ லி: 'பால்வரைத் தெய்வம்’ எனக் கூறும் ஊழின் பங்கு காவியம் முழுவதுமே ஊடுருவி நிற்ப தைக் காண்கின்றோம். இடத்திற்கேற்றவாறும் சந்தர்ப் பத்திற்கேற்றவாறும் கதை மாந்தர்களின் வாயிலாக ஊழின் வலி எடுத்தோதப் படுகின்றது 14. டிை. 313:22, 15. (οδις. 3. 43: 2 ΙΙ 16. குறள்-934