பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியம் உணர்த்தும் உண்மை 141 (!) பாண்டவர்களைச் சூதிற்கழைக்குமாறு தந்தையை வற்புறுத்துகின்றான் துரியோதனன். அப்படிச் செய்யாவிடில் தன் தலையைக் கொய்து உயிர் விடுவதாக அச்சுறுத்து கின்றான். திருதராட்டிரனின் மனம் தளர்வுறுகின்றது. விதியை நினைக்கின்றான். விதி: விதி: விதி! மகனே! - இனி வேறெது சொல்லுவன் அடமகனே! கதியுறு காலனன்றோ - இந்தக் கயமக னெனநினைச் சார்ந்துவிட்டான்? கொதியுறு முளம் வேண்டா; - நின்றன் கொள்கையின் படிஅவர் தமை அழைப்பேன் ." என்று பாண்டவர்க்கு அழைப்பு விடுக்க ஒருப்படுகின்றான். திருதராட்டிரன் இந்திரப் பிரஸ்தம் செல்ல விதுரனுக்கு விடை கொடுக்கும்போது பாண்டவர்க்கு அழைப்பு தரும் பேச்சினிடையில் சகுனியின் சொற்கேட்டுத் துரியோதனன் செய்யப் போகும் சதியினையும் குறிப்பிடுமாறு பணிக் கின்றான். இதனைக் கேட்ட விதுரன் பெருந்துயர் கொண்டு, 'போச்சுது! போச்சுது பாரத நாடு: போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்! ஆச்சரி யக்கொடுங் கோலங்கள் காண்போம்! ஐய இதனைத் தடுத்தல் அரிதோ?” எனறு ஏங்கிக் கூறும் போது, 'சென்று வருகுதி, தம்பி, இனிமேல் சிந்தனைஏதும் இதிற்செய மாட்டேன்! வென்று படுத்தனன் வெவ்விதி என்னை! மேலை விளைவுகள் நீஅறி யாயோ? 17. பா. ச. 1. 14; 108