பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பாஞ்சாலி சபதம் (5) தலைவிரிகோலமாக அவைக்கு இழுத்து வரப் பெற்ற திரெளபதியின் அவல நிலையைக் கண்ட வீமனின் வெஞ்சினம் கரை புரண்டோடுகின்றது. கதிரைவைத் இழந்தான் கையை எரித்திட எரிதழல் கொண்டு வா என்று சகாதேவனைப் பணிக்கும்போது பார்த்தன் குறுக் கிட்டுப் பேசும் பேச்சில் விதியின் வலி சுட்டப் பெறுகின்றது. 'தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்: தருமம் மறுபடி வெல்லும் எனுமியற்கை மருமத்தை நம்மாலே உலகம் கற்கும் வழிதேடி விதி.இந்தச் செய்கை செய்தான்; கருமத்தை மேன்மேலும் காண்போம்; இன்று கட்டுண்டோம, பொறுத்திருப்போம்; காலம் மாறும். தருமத்தை அப்போது வெல்லக் காண்போம், தனுஉண்டு காண்டிவம் அதன்பேர்’’’ என்பதில் விதியின் சதி”யைக் காட்டுகின்றார் கவிஞர். பெண்ப வம் பொல்லாதது: காவியத்தின் பெருவிசை இது. இந்தத் தெய்விக மலர்க் கொடி”யை அரசவையில் அவ மானம் செய்ததை யார்தான் பொறுக்க முடியும்? இவள் பொருட்டுதானே கண்ணன் பாண்டவர்கள் ஐவரையும் கண் இமைபோல் நின்று காத்தான்? அரசவையில் இவர் நீதி கேட்டழுத குரல் கல் நெஞ்சத்தையும் உருக்கும் தன்மையது: « 4 фs e eவிதியோ கணவரே! அம்மி மிதித்தே அருந்ததியைக் காட்டியெனை வேதச் சுடர்த்தீமுன் வேண்டி மணஞ்செய்து பாதகர்முன் இந்நாள் பரிசழிதல் காண்பீரோ? பேயரசு செய்தால், பிணந்தின்னும் சாத்திரங்கள்! 23. Q్క, 5, 67:283