பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔 பாஞ்சாலி சபதம்- ஒருநோக்கு படுகின்றது; இப்படைப்பிற்குத்தான் புலமையும் இன்றியமை யாததாகின்றது. தமிழில் உள்ள ஐஞ்சிறுங்காப்பியங்கட் கோப்ப இச்சிறு காப்பியத்தை மதிக்கலாம். பாரதியாரின் பெரிய பாடல் இதுவேயாகும். பாரதத்தில் வரும் சூதுப் போர்ச் சருக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது இது. வில்லி பாரதத்தில் இச்சருக்கம் 283 பாடல்களால் விரித்தோதப் பெறுகின்றது. பாரதியார் தம் காவியத்தை 308 ப்ாடல்களால் இயற்றியுள்ளார். இவற்றுள் திரெளபதியை மன்றுக்கு அழைத்து வருமாறு சொல்லியதுபற்றி சகத்தில் உண்டான அதர்மக் குழப்பத்தைக் கூறும் பகுதியும், அவள் துச்சாதனனால் மின்துக்கு இழுத்து வரப்பெறுவதை து வலும் பகுதியும் நீண்ட பாடல்களாலானவை. பாரதியார் தம் காவியத்தை வியாசபாரதத்தைத் தழுவி எழுதியதாக அவரே தன் முகவுரையில் கூறுவதால் இதனை வழி நூலாகக் கொள்ளுவதில் தடை இல்லை. இதனால் பாரதியாரின் வடமொழிப் புலமையை ஒருவாறு அறிந்து கொள்ள முடிகின்றது. பாரதியார்தான் முதன் முதலில் எளிய நடையில் காவியம் படைத்தார் என்பதை மறுத்தற்கில்லை. ஆனால் இந்நடை தமிழுக்குப் புதிதன்று. இதைத் தொடக்கத்தில் காணப்பெறும் நொண்டிச் சிந்து என்ற குறிப்டே மெய்ப் பிக்கின்றது. நொண்டிச் சிந்தும், காவடிச் சிந்தும்' தமிழ் மொழிக்குப் புதிதல்ல. பாரதியாரின் காவிய நடை பெரும் பாலும் இவற்றின் நடையை ஒட்டியதாகும். சாதாரண அறிவு படைத்த பொது மக்கட்கு விளங்கும் படியான எளிய 11. வில்லிபாரதம் - பகுதி 2 (ராஜம் பதிப்பு) 12. காவடிச்சிந்து என்ற பெயரை நினைத்தவுடன் அண்ணாமலை ரெட்டியாரும் நினைவுக்கு வரு ്തുന്,