பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

it. பாஞ்சாலி சபதம்-ஒருநோக்கு நிபுலன்ஜென்லைத் (Nitutengelied, பியோவுல்ஃப் (Beowulf) என்பவற்றைக் குறிப்பிடலாம். இரண்டாவது வகையை @ováðué strogliosir (Literary or Artificial Epics) என்று வழங்குவர். பெருங் காப்பியங்களுக்குள்ள பண்புகள் யாவும் இவை கொண்டிலங்கினும் கவிஞன் தன் நாட்டைப் பற்றியோ தன் நாட்டைச் சார்ந்த வீரனொருவனைப் பற்றியோ சிறப்பிக்க வேண்டுமென்ற அக்கறை கொள்வ தில்லை. ஏதாவது ஒருபுராணக்கதையிலுள்ள (Mythology) வீரனைக் காப்பியத் தலைவனாகக்கொண்டு காவியத்தைப் படைக்கலாம். மில்ட்டனின் துறக்க இழப்பினை (Paradise 1.க) இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். நம் தாட்டுக் காவியங்களாகிய சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்றவைகள் மேனாட்டு முதல்வகைக் காவியங்களுள் அடங்குமாயினும் அவற்றிற்குத் தனிச் சிறப்புகள் உள்ளன. இவை வெறும் நாட்டினையோ வீரனையோ சிறப்பிக்காது, மன்பதைக்கு இன்றியமையாத, என்றும் அழியாத, உண்மைகளை வழங்கிவரும் இலக்கியக் கருவூலங்கள் என்று சொல்லலாம். மன்பதைக்கு என்றுமே ஒரு கலங்கரை விளக்கம் போன்ற ஒன்றினைப் படைக்க வேண்டும் என்று பல ஆண்டுகள் கனவுகண்டு துறக்க இழப்பு என்ற காவியத்தைப் படைத்த மில்ட்டனைப் போலவே இளங்கோவும் கம்பனும் சாவா இலக்கியங்களைப் படைத்துள்ளனர். பாஞ்சாலி சபதம் : பாரதி இயற்றியுள்ள பாஞ்சாலி சபதம் இருபதாவது நூற்றாண்டில் உருவான ஒரு தமிழ்க் காப்பியம். தருமன் இந்திரப்பிரத்தத்தில் இராசசூயப் பெரு வேள்வி முடித்த பிறகு துரியோதனன் முதலிய கெளரவர்கள் அத்தினபுரத்தில் மண்டபம் ஒன்று சமைத்துப் பாண்டவர் களுக்கு அழைப்பு அனுப்பி அவர்களை வரவழைத்து, வஞ்சக :ாகச் சூதுக்கிழுத்து, அவர்களை அவமானப்படுத்திய