பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் காவியங்கள் 13 காப்பியம் தொன்மை’ என்று குறிம்பிடும். வடநூலார் இதனைச் சம்பு’ என்று வழங்குவர். மேனாட்டு இலக்கிய வரலாற்றைப் பார்த்தால் அங்கும் இந்தப் பெருங்காப்பிய அமைப்பு காலத்திற் கேற்றவாறு மாற்றம் அடைந்துள்ளதைக் காணலாம். மேனாட்டு ஆசிரி யர்கள் அனைவருமே ஹோமரையும் வர்ஜிலையும் தமக்கு முன்மாதிரியாகக்கொண்டு காப்பியங்களை இயற்றியுள்ளனர். ஆங்கில மகாகவிஞரான மில்ட்டன் மேற்கூறிய இருவரைப் பின்பற்றியே தமது துறக்க இழப்பினைப் படைத்தா ரெனினும் அவருக்கு முன்பிருந்த கவிஞர்களை விடத் தமது காப்பியப் படைப்பால் அழியாப் புகழ் பெற்றார். துறக்க இழப்பின்எதிர்த்தலைவனாகியசாத்தானின் விடாப்பிடியான தீவிரமான மனவேதனை தற்கால மாந்தரின் அறநெறிக் கருத்தினை எடுத்துக் காட்டும்படியாக அமைந்துள்ளது.* இதுகாறும் பெருங்காப்பியத் தலைவர்கள் மனிதரில் ஒரு தேவன்போல் (Supehuman) இருந்தனர். ஆனால் மில்ட் டனின் காப்பியத் தலைவன் ஒரு தேவனாகவே இருக்கின் றான். எல்லாக் காலத்திற்கும் பொருந்தும்படியான பல அரிய கருத்துகளைக்கொண்டு காப்பியத்தைப் படைத்துள் ளார் மில்ட்டன். மேனாட்டு அறிஞர்கள் பெருங்காப்பியங்கள் பற்றிக் கூறியுள்ள கருத்துகளை (1 தேர்ந்தெடுக்கும் கதைப் பொருன், (2) நிகழ்ச்சிகளின் புணர்ப்பு, (3) காப்பியத்தின் ஒருமைப்பாடு, (4) கதை மாந்தர்களின் படைப்பு, (5) தெங் விக சம்பந்தமான கூறுகள், (5) காப்பிய நடை என்று ஆறு பகுதிகளில் அடக்கலாம். தண்டியாரின் கருத்துகளையும் இக் கருத்துகளையும் அடிப்படையாகக் கொண்டு பாஞ்சாலி சபதத்தை ஆராய்வோம். 4. Lascelles Abererombie: The Epic-Lá. 105