பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

薰学 பாஞ்சாலி சபதம்-ஒருநோக்கு தண்டியாரின் கருத்துப்படி நூல் இறைவாழ்த்துடன் தொடங்கப்பெறுதல் வேண்டும். பாரதியார் வேதத்தில் குறிப்பிடப்பெறும் பிரும்மத்தையே வணங்கி நூலைத் தொடங்குகின்றார். வேதத்தில் பிரும்மம் ஓம்’ என்றே வழங்கப்பெறுகின்றது. இந்தப் பிரும்மம்' அங்கு இங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருப்பதால் ஆம்: என்றும் குறிக் கப் பெறுகின்றது. வடமொழியில் 'ஓம்' என்னும் சொல்லுக்கு ஆம் என்ற பொருளும் உண்டு. எவ்விடத்தும் இல்லை’ யாதவின்றி "ஆம்" என இருத்தல்பற்றியே வேதத்தில் பிரும். மத்துக்கு ஒம் என்ற திருப்பெயர் கொடுக்கப் பெற்றுள்ளது. தமிழ்க் காப்பியங்களில் பிரும்மத்தைக் காப்பாக அமைத்தது பாரதியார்மேற்கொண்ட புதுமையாகும். அடுத்து, சொல்லின் செல்வியாகிய நாவின் கிழத்தியாம் கலைமகளை வழிபடு கின்,ார். 'அறம், பொருள், இன்பம், வீடு' என்ற நாற் பொருள்களில் காவியம் சில அறக்கருத்துகளை தன்னுளே கொண்டிலங்குகின்றது. சூதாடலால் வரும் தீமைகளை எண்ணி அச்செயலைத் தவிர்க்குமாறு திருதராட்டிரன் தன் மகனை வேண்டுகின்றான்; அண்ணன் வாயிலாக துரியோ தனனின் கவறாடல் சதியைக் கேட்டதும் விதுரன், போச்சுது! போச்சுது பாரத நாடு! போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்! ஆச்சரி யக்கொடுங் கோலங்கள் காண்போம்; ஐய இதனைத் தடுத்தல் அரிதோ? என்று கூறி பெருந்துயர் அடைகின்றான். தருமனும் இக் கவறாடல் இருமையும் கெடுக்கும் இழி தொழில்’ என் கின்றான். மேலும்,