பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் காவியங்கள் #5 என்றனை வஞ்சித்தென் செல்வத்தைக்கொள்வோர் என்ற னக்கிடர் செய்பவ ரல்லர்; முன்னை நின்றதோர் நான்மறை கொல்வார்; மூது ணர்விற் கலைத்தொகை மாய்ப்பார்; பின்னை என்னுயிர்ப் பாரத நாட்டில் பீடை செய்யுங் கலியை அழைப்பார்." என்று சகுனியிடம் கூறுகின்றான். நூலைப் பயிலும்போது இன்பம்’-இலக்கிய இன்பம்-பயப்பதை உணர்கின்றோம். இந்நூலின் தலைவி பாஞ்சாலி; இவள் தன்நிகர் இல்லாத் தலைவி" யாக விளங்குகின்றாள் சிலப்பதிகாரக் கண்ணகி போல. அத்தினபுரத்தின் வருணனை நூலின் தொடக்கத்தில் காணப்பெறுகின்றது. அத்தின புரமுண் டாம்; - இவ் வவனியி லேயதற் கிணையிலை யாம்; பத்தியில் வீதிக ளாம்;-வெள்ளைப் பனிவரை போற்பல மாளிகையாம்; என்று தொடங்கும் வருணனையில் சோலைகள், வாவிகள், வேள்விச் சாலைகள், மந்திர கீதங்கள் முழங்கும் இடங்கள், சாத்திர ஆராய்ச்சிக் கழகங்கள் முதலியவை காட்டப்பெறு கின்றன. தற்கால நிலையை அறிந்து, சிந்தையி லறமுண் டாம்; எனிற் சேர்த்திடுங் கலிசெயும் மறமுமுண் டாம். மெய்த்தவர் பலருண்டாம்; - வெறும் வேடங்கள் பூண்டவர் பலருமுண் டாம்; 5. பா.ச. 1.34; 174