பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் காவியங்கள் 17 பொன்னங்க மணிமடவார் மாட மீது புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச, வன்னங்கொள் வரைத்தோளார், மகிழ மாதர் மையல்விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு. பேரறமும் பெருந்தொழிலும் பிறங்கும் நாடு, பெண்களெலாம் அரம்பையர்போல் ஒளிரும் - நாடு வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி வேள்வியெனும் இவையெல்லாம் விளங்கும் நாடு. சோரமுதற் புன்மையெதுந் தோன்றா நாடு, தொல்லுலகின் மணிமுடிபோல் தோன்றும் நாடு பாரதர்தந் நாட்டினிலே நாச மெய்தப் பாவியேன் துணைபுரியும் பான்மை என்னே." என்ற கவிதைகள் மிகுந்த நாடகத் தன்மையுடன் அமைந் துள்ளன. நாட்டு வளமும் பெருமையும் இவற்றில் காட்டப் பெறுகின்றன. பாண்டவர்கள் அத்தினபுரத்திற்கு வரும் வழியில் பார்த்தன் பாஞ்சாலிக்குப்படுஞாயிற்றின் எழிலைக் காட்டுவ தாக அமைந்த பகுதியில் இரு சுடர் தோற்றத்தில் ஒரு சுடர் தோற்றம் அற்புதமாகக் காட்டப்பெறுகின்றது. அதில் இரு பாடல்களை ஈண்டுத் தருவோம். கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்; கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்; கணந்தோறும் நவநவமTம் களிப்புத் தோன்றும்; கருதிடவும் சொல்லிடவும் எளிதோ? ஆங்கே, 6. டிெ 1.17: 116 - 118 2-سtarr