பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு கணந்தோறும் ஒருபுதிய வண்ணம் காட்டிக் காளிபரா சக்திஅவள் களிக்குங் கோலம் கணந்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர் கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய். 'அடிவானத் தேஅங்கு பரிதிக் கோளம் அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய் இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து, முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே, மொய்குழலாய், சுற்றுவதன் மொய்ம்பு கானாய்! வடிவான தொன்றாகத் தகடி ரண்டு வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய். இவை படிப்போரை எல்லையற்ற இலக்கியச் சுவையில் ஈடு படுத்துவதை அறியலாம். தண்டியார் கூறும் ‘மந்திரம், தூது, செலவு இகல் வென்றி இவற்றுள் மந்திரம்' என்பது, துரியோதனன் சபையில் சகுனியோடு பாண்டவர்கட்குத் தீங்கிழைக்கும் சதி ஆலோசிக்கப்பெறுவதையும், திருதராட்டிரன் அதனைக் கடிவதையும் போன்ற நிகழ்ச்சிகளைக் குறிப்பதாகக் கொள்ள லாம். பாண்டவர்கள் அத்தினபுரத்திற்குப் பயணப்பட்டு வருதல் செலவு என்பனதால் உணர்த்தப்படுகின்றது. பாண்ட வர்களை அழைப்பதற்காக விதுரன் இந்திரப்பிரத்தத்திற்கு வருதலைத் துது என்று குறிப்பிடுவதாகக் கொள்வதில் தவறு இல்லை. பார தி யி ன் காப்பியம் அழைப்புச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதற் சருக்கம், சபதச் சருக்கம் என்று ஐந்து சருக்கங்களாக அமைந் திருப்பது சருக்கம் இலம்பகம் பரிச்சேதம் என்னும் பான்மை