பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் காவியங்கள் 19 யின் விளங்கி என்ற தண்டியாசிரியரின் விதியை யொட்டித் தான் அமைந்துள்ளது என்று கருதலாம். மேலும், இக்காப்பி யத்தில் கருணம், ரெளத்திரம், வீரம் போன்ற சுவைகளையும் உணர்ச்சியுடன் படிக்கும்போது உணர்ந்து மகிழலாம். தண்டி யார் கூறும் காப்பிய உறுப்புகள் குறைந்து வரினும் குற்றம் இல்லை என்ற புறனடையும் இஃது ஒரு சிறந்த காப்பியம் என்பதை அரண் செய்கின்றது. மேனாட்டார் காப்பியம் பற்றிக் கூறியுள்ள கருத்துகளின் பொருத்தத்தை அடுத்து வரும் இயல்களில் காண்போம்.