பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு என்று கவினுற எடுத்துக்காட்டுகின்றார் கவிஞர். துரியோதன் தன் நிலை குலைந்து நிற்கின்றான்: யாது தேரினும் எவ்வகை யானும் யாது போயினும் பாண்டவர் வாழ்வைத் தீது செய்து மடித்திட எண்ணிச் செய்கை யொன்றதி றியான்திகைப் பெய்தி நிற்கின்றான். வத்தி வைப்பதில் வல்லவனான சகுனி மாமனைச் சரண் எய்தி. ஏது செய்வம்? என்று சொல்லி நைகின்றான்: நெஞ்சிற் குமுறிக் கொண்டிருந்த அனைத்தை யும் அவன் திருமுன் கொட்டி விடுகின்றான். மாமன் யோசனைப்படி மஞ்சன் பாண்டவர்களை வஞ் சனையாகச் சூதுக்கிழுக்கின்றான். சூதின் முடிவு பாஞ்சாலி யின் சபதத்திற்கு வித்திடுகின்றது. அதிலிருந்துதான் பாரதப் போரும் முளைத்து வளரத் தொடங்குகின்றது. -'ஒம் தேவி பராசக்திஆணை யுரைத்தேன்; பாவி துச்சாதனன் செந்நீர் - அந்தப் பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம், மேவி இரண்டுங் கலந்து - குழல் மீதினிற் பூசி நறுநெய் குளித்தே சிவிக் குழல்முடிப் பேன்யான் - இது செய்யுமுன் னேமுடியேன்” என்பது திரெளபதி உரைத்த சபதம். கவிஞர் தாம் வழிபடும் தெய்வமான பராசக்திமீது ஆணை வைத்தே சபதமிடும்படி செய்யும் திறம் சிந்தித்தற்குரியது. 3. டிை 5.13:307