பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக் கரு 23 இந்தச் சபதமே இச்சிறு காவியத்தின் மகுடமாகத் திகழ் கின்றது. காவியத்தின் இறுதிப் பகுதிகளாகிய துகிலுரிதல் சருக்கமும் சபதச் சருக்கமும் அதியற்புதமான படைப்புகள் என்றே சொல்ல வேண்டும். இந்தக் கட்டங்களில் பாரதியை யும் வில்லியையும் ஒப்பிட்டு நோக்கினால் பாரதியின் பேராற் றல் புலனாகும். பாண்டவர்கள் அனைத்தையும் தோற்ற பிறகு துரியோதனனின் அவையில் நடைபெறும் அக்கிரமங்கள் வில்லிபாரதத்தில் மிகச் சாதாரண முறையில்தான் சித்திரிக் கப் பெற்றுள்ளன. பாரதியாரின் காப்பியத்தில் இக்கட்டங் கள் உயர்ந்த சோக நாடகத் தன்மையுடன் கையாளப்பெற் றுள்ளன. தருமன் சகோதரர்களையும் தன்னையும் சூதில் தோற்ற பிறகு சகுனி துரியோதனனை நோக்கிப் பேசுகின்றான்: இன்னும் பணயம் வைத் தாடுவோம்;- வெற்றி இன்னும் இவர்பெற லாகுங்காண் பொன்னும் குடிகளும் தேசமும் - பெற்றுப் பொற்பொடு போதற் கிடமுண்டாம்; - ஒளி மின்னும் அமுதமும் போன்றவள் - இவர் மேவிடு தேவியை வைத்திட்டால், அவள் துன்னும் அதிட்ட முடையவள் இவர் தோற்ற தனைத்தையும் மீட்டலாம்' இவ்வாறு மாமன் உரைத்த பேச்சைக் கேட்டவுடன் துரியோதனன் நன்று நன்று' என்று தன் ஒப்புதலைத் தெரி விக்கின்றான். அறக்கோமகனும் பாஞ்சால நாட்டின் தவப் பயனை, சூதினில் பணயம் என்றே அந்தக் கொடியவர் அவைக் களத்தில் வைத்திடக் குறித்து விடுகின்றான். 4. ஷ்ெ 4.51:244