பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 5 கதைக் கரு இருபகடை போடென் றான்,-பொய்ம்மைக் காய்களும் இருபகடை போட்டவே." இந்த அடிகளைப் படிக்கும்போதே நமது கண்கள் குளமாகின் றன. துரியோதனனின் அவையிலுள்ள கெளரவர் கூட்டம் கும் மாளம் போடுகின்றது; சிலர் தனித்தனியாகக் குதித்தும் கொக்கரித்தும் ஆடுகின்றனர். இக்காட்சியைக் கவிஞர், திக்குக் குலுங்கிடவே-எழுந்தாடுமாம் தீயவர் கூட்டமெல் லாம் தக்குத்தக் கென்றே அவர்-குதித்தாடுவார் தம்மிரு தோள் கொட்டுவார் ஒக்குந் தருமனுக்கே-இஃதென்பார் "ஓ! ஓ! வென் றிரைந்திடுவார்; கக்கக்கென் றேநகைப்பார்-துரியோதனா கட்டிக்கொள் எம்மை’ என்பார். மாமனைத் துரக்கா யென்பார்-அந்த மாமன்மேல் மாலை பலவீசு வார் சேமத் திரவியங்கள் - பல நாடுகள் சேர்ந்ததி லொன்று மில்லை காமத் திரவிய மாம்-இந்தப் பெண்ணையும் கைவச மாகச்செய் தான்; 'மாமனொர் தெய்வ மென்பார்-துரியோதனன் வாழ்க’வென்றார்த்திடு வார்!’ அடுத்து, துரியோதனன் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டுகின் றார். - 4ெ5.246 8. டிெ, 4.52, 247, 248.