பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக் கரு 27 நெஞ்சு பொறுக்க முடியாத பல அக்கிரமங்கள் அரசவை யில் நடைபெறுகின்றன. அவையிலிருந்த கேள்விபல உடையோர், கேடிலா நல்லிசையோர் வேள்வி தவங்கள் மிகப்புரிந்த, வேதியர்கள் மேலோர் முதலிய யாவரும் அவ்வடாத செயல்களைத் தடுக்க முடியாது மனஞ் சோர்ந்து மூங்கையர்போல் வாளா இருக்கின்றனர். அறமே வடிவெடுத்தாற்போன்ற தருமன் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு சும்மா இருக்கின்றான். பாண்ட வரை மின்செய் கதிர் விழியால் வெந்நோக்குகின்றாள்: திரெளபதி. ஆடை குலைவுற்று நிற்கிறாள்!-அவள் ஆவென் றழுது துடிக்கிறாள்-வெறும் மாடு நிகர்த்ததுச் சாதனன்-அவள் மைக்குழல் பற்றி இழுக்கிறான்-இந்தப் பீடையை நோக்கினன் வீமனும்-கரை மீறி எழிந்தது. வெஞ்சினம்-துயர் கூடித் தருமனைப்" பழித்துப் பேசுகின்றான். எல்லாவற்றையும் இழக்கப் பொறுத்திருந்தோம். துருபதன் மகளை, திட்டத்துய்மன் உடன்பிறப்பை இருபகடை யென்றாய்; ஐயோ! இவர்க்கடிமை என்றாய்!” என்று கூறி சகாதேவனைப் பார்த்து, 'இது பொறுப்ப தில்லை-தம்பி! எரிதழல் கொண்டு வா கதிரை வைத்திழந்தான்-அண்ணன் கையை எரித்திடுவோம்’’’ 11. டிெ, 5.65:272 12. டிெ. 5.66:281