பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக் கரு 29 கின்றது. மேனாட்டு அறிஞர் கருத்துப்படி கதையில் நிகழ்ச் சிகளின் புணர்ப்பு (Pilot) நோக்கத்தின் பெருமையாலும் நிகழ்ச்சிகளின் மேம்பாட்டாலும் சிறப்படைகின்றது. ஒரு துன்பியல் நாடகத்திற்குக் கொடுக்கப்பெறாத காலக் கட்டுப் பாடு இதற்கு இல்லை. இதில் தொடர்ந்தாற்போல் முழு வளர்ச்சியைப் பார்ப்பதற்கு மனிதக் கற்பனைக்கு இடம் உண்டு. சிறு நிகழ்ச்சிகள் கூடியவரை நீக்கப்பெறினும் அவை பெரு நிகழ்ச்சிக்குத் துணை புரியுமானால் ஏற்றுக் கொள்ளப்படும். இந்த முறையில் பாஞ்சாலி சபதத்தின் நிகழ்ச்சிகளின் புணர்ப்பு நன்கு அமைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதனை நினைவில் கொண்டுதான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும், அன்னை பாஞ்சாலி-சபதம்’ அறைதல் கேட்டேனடா முன்னைக் கதையெல்லாம்-கண்ணின் முன்ந டந்த தடா' என்று கற்பனை நயத்துடன் பட்டிக்காட்டான் ஒருவன் வாய் மொழியாகக் கூறிச் சென்றார். காவியத்தை உணர்ச்சி யுடன் படிப்போர் காவியத்தில் காட்டப்பெறும் நிகழ்ச்சிகள் யாவும் படிக்கும் பொழுதே உருக் காட்சியாகக் (Imagery) காணமுடியும் என்ற உண்மையை நன்கு அறிவார்கள். நிகழ்ச்சிகளின் புணர்ப்பில் ஒரே ஒரு குறை தட்டுப்படு கின்றது. திரெளபதி கண்ணனைத் துதி செய்யும் பகுதி நீண்டு காப்பிய அழகில் ஒரு சொட்டு வைத்து விட்டது. என்று கருத இடம் ஏற்பட்டு விட்டது. 14. மலரும் மாலையும்-பாரதியும் பட்டிக் காட்டானும் 12.