பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக் கரு - 31 கழற்றிடக் கழற்றிடத் துணி புதிதாய் வண்ணப்பொற் சேலைக ளாம்-அவை வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே" என்று பாடல்கள் அமைந்திருத்தல் வேண்டும். வில்லி இக்கட்டத்தை மிக நன்றாகக் கையாண்டுள்ளார். திரெளபதி கண்ணபிரானைத் துதி செய்வதை, ஆறாகி இருதடங்கண் அஞ்சனவெம் புனல்சோர அளகம் சோர வேறான துகில்தகைந்த கைசோர மெய்சோர வேறோர் சொல்லும் கூறாமல் கோவிந்தா! கோவிந்தா!!’ என்றரற்றிக் குளிர்ந்து நாவில் ஊறாத அமிழ்துாற உடல் புளகித் துள்ள மெலாம் உருகி னாளே." என்று மிக அழகாகக் காட்டுவர். ஆனால் பாரதியார், உட்சோதியிற் கலந்தாள்;-அன்னை உலகத்தை மறந்தாள் ஒருமையுற்றாள் என்று மிக அழகாகத்தான் காட்டினார். இவ்வடிகள் சரணா கதித் தத்துவத்தை மிக அழகாக உணர்த்துகின்றது. இதனை யடுத்து, 'ஹரி, ஹரி, ஹரி, என்றாள். . . . என்று தொடங்கி, ஐய, நின் பதமலரே-சரண் ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி - என்றாள் -سم--------س-سمس --------۔۔--مممم--سیس۔--سہ۔--سید.....--م 18. டிெ 5, 70: 299, 300 19. வில்லி பாரதம். சூதுப்போர்.400