பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

أسس نة فقجي காவியத்தின் ஒருமைப்பாடு காவியத்தின் ஒருமைப்பாடு என்ற குறிக்கோள் (ideal of unity) அரிஸ்ட்டாட்டில் காலத்திலிருந்து சிறப்பாகக் கருதப் பெறும் ஒரு விதியாகும். மேனாட்டு திறனாய்வாளர்கள் இதனை ஒரு சிறந்த கொள்கையாகவே போற்றி வருகின் றனர். துன்பியல் நாடகத்தைப் போலவே காப்பியத்திலும் ஒரே தொடர்ந்த நிகழ்ச்சி (Organic action) வளர்ச்சி பெறுதல் வேண்டும்; அது சாதாரணமாக ஒரு சந்தர்ப்பத்தின் விளைவாகத் தோன்றி வளர்ந்து, தெளிந்த அமைதியுடன் முடிவடைதல் வேண்டும். அரிஸ்ட்டாட்டில் கருத்துப்படி ஒரு காப்பியத்திற்குத் தொடக்கம், நடு, முடிவு இருத்தல் வேண்டும். இராமயணம் போன்ற ஒரு பெரிய இதிகாசக் காப்பியத்தில் ஒரு தனி நிகழ்ச்சியுடன் எண்ணற்ற கிளைக் கதைகள் (Episodes) அவை பொருந்தும் அளவுக்கு நுழைக்கப் பெறும். ஆனால், அவையனைத்தும் காப்பியத் தலைவனைப்பற்றியே கூறுவனவாக இருக்கும். பெரும் காலும் இக் காப்பியம் பேரெடுப்பாகத் தொடங்குவதற்கும் இவ்விணைப்புகள் தெளிவாக இருப்பதற்கும் ஏதோ ஒரு 1. இவற்றை வடநூலார் உபக்கிரமம், மத்திய பாகம், உபசம்ஹாரம் என்று கூறுவர். பா-3