பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பாஞ்சாலி சபதம் நிகழ்ச்சி எங்கோ ஓரிடத்தில் தொடங்கிப் பின்னால் விளக்கத் திற்குத் துணை புரிவனவாக அமையும். பாரதியின் பாஞ்சாலி சபதம்’ அழைப்புச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதற் சருக்கம் சபதச் சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களாக அமைந்துள்ளது. தண்டியாசிரியரின் இலக்கணப்படி சருக்கம் இலம்பகம் பரிச் சேதம் என்னும் பான்மையின் விளங்கி அமைந்துள்ளது என்று சொல்லலாம். அழைப்புச் சருக்கத்தில் காப்பியத்தின் கதை கருக் கொள்கின்றது; துரியோதனனின் பொறாமையே கதையின் தொடக்கத்திற்கு வித்தாக அமைகின்றது. இராச சூயப் பெரு வேள்வியைப் பாண்டவர்கள் வெற்றியுடன் நிறைவேற்றியதும், அதில் நாரதர் முதல் பல முனிவர்கள் பங்கு பெற்றதும், கண்ணன் அருளாலும் தம்பியர் தோள் வலியாலும் வழவழத் தருமன் சக்கரவர்த்தியாக உயர்ந்த துவும், அம்புவி மன்னரெல்லாம் நம்பரும் பெஞ்செல்வம் தருமனின் நலங்கிளர் சபையினில் பொழிந்ததும், பல்வேறு பரிசுப் பொருள்கள் வந்து குவிந்ததுமான நிகழ்ச்சிகளை யெல்லாம் எண்ணி எண்ணி மனம் புழுங்கிப் பொறாமையாக வடிவெடுப்பதை அற்புதமாகக் காட்டுகின்றார் கவிஞர். இதனை அவர், ‘என்றில் வாறு பலபல எண்ணி ஏழை யாகி இரங்குதலுற்றான் வன்றி றத்தொரு கல்லெனும் நெஞ்சன் வானம் விழினும் அஞ்சுதல் இல்லான், குன்ற மொன்று குழைவுற் றிளகிக் குழம்பு பட்டழி வெய்திடும் வண்ணம் கன்று பூதலத் துள்ளுறை வெம்மை காய்ந்தெழுந்து வெளிப்படல் போல