பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பாஞ்சாலி சபதம் சிற்றப்பன் என்ற முறையையும், தந்தை அமைச்சரவையில் ஒரு மூக்கியமான அமைச்சன் என்றும் பாராமல், நன்றி கெட்ட விதுரா - சிறிதும் நான மற்ற விதுரா தின்ற உப்பினுக் கே - நாசம் தேடு கின்ற விதுரா அன்று தொட்டு நீயும் - எங்கள் அழிவு தேடு கின்றாய் ஐவ ருக்கு நெஞ்சும் - எங்கள் அரண்ம னைக்கு வயிறும் தெய்வ மன்று னக்கே - விதுரா! செய்து விட்ட தேயோ? மெய்வ குப்பவன் போல் - பொதுவாம் விதிஉ ணர்ந்த வன்போல் ஐவர் பக்கம் நின்றே - எங்கள் அழிவு தேடுகின்றாய். அன்பி லாத பெண்ணுக்கு - இதமே ஆயி ரங்கள் செய்தும் முன்பின் எண்ணு வாளோ? - தருணம் முண்ட போது கழிவாள்; வன்பு ரைத்தல் வேண்டா - எங்கள் வலிபொறுத்தல் வேண்டா இன்ப மெங்க னுண்டோ - அங்கே ஏஇடு: என்றெல்லாம் மரியாதைக் குறைவாக துரியோதனின் ஏசிப் பேசும் பேச்சும், அதற்கு மீண்டும் விதுரன், AASAASAASAAAS 2. பா.ச.3 41:208, 209, 212