பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத்தின் ஒருமைப்பாடு 37 சென்றாலும் நின்றாலும் இனி என் னேடா செப்புவன நினக்கென நான் செப்பினேனோ மன்றார நிறைந்தி ருக்கும் மன்னர் பார்ப்பார் மதியில்லா மூத்தோனும் அறியச் சொன்னேன் இன்றோடு முடிகுவதோ? வருவ தெல்லாம் யானறிவேன்.வீட்டுமனும் அறிவான் கண்டாய். வென்றான்.உள் ஆசையெலாம் யோகி யாகி வீட்டுமனும் ஒன்றுரையா திருக்கின் றானே. விதிவழிநன் குணர்ந்திடினும் பேதை யேன் நான் வெள்ளைமன முடைமையினால், மகனே நின்றன் சதிவழியைத் தடுத்துரைகள் சொல்லப் போந்தேன்; சரிசரிஇங் கேதுரைத்தும் பயனொன் றில்லை, மதி வழியே செல்லுக’ என்று கூறி வாய் மூடித் தலை குனிந்து தன் இருக்கையில் அமர்ந்து கொண்டது போன்ற நிகழ்ச்சிகளில் கதையின் வளர்ச்சி ஆமை வேகம் கொண்டாலும், மீண்டும் சூதாட் டம் தொடங்கும்போது கதையின் வளர்ச்சியில் சூடு பிடிக் கின்றது. இந்த ஆட்டத்தில் ஆயிரங்களான நீதிகளை எல்லாம் உணர்ந்த தருமன் நாட்டை இழத் தலை, தேயம் வைத்தி ழந்தான் -சீச்சீ! சிறியர் செய்கை செய்தான் என்று கவிஞர் காட்டுவார். அடுத்து சகோதரர்களையும் தன் னையும் வைத்து ஆடினால் தருமன் இழந்த அனைத்தையும் திரும்பப் பெற வாய்ப்புண்டு என்று சகுனி கூறி அழைக்க, தருமனும் சகாதேவன், நகுலன், பார்த்தன், வீமன், தான் என்ற வரிசையில் பணயமாக வைத்து அனைவரையும் இழித்து விடுகின்றான். சகுனி பேசுகின்றான்.