பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஞ்சாலி சபதம் 3. § இன்னும் பணயம் வைத் தாடுவோம்:- வெற்றி இன்னும் இவர்பெற லாகுங் காண்! பொன்னும் குடிகளும் தேசமும் - பெற்றுப் பொற்பொடு போதற் கிடமுண்டாம் - ஒளி மின்னும் அமுதமும் போன்றவள் - இவள் மேவிடு தேவியை வைத்திட்டால் - (அவள்) துன்னும் அதிட்ட முடையவள் - இவர் தோற்ற தனைத்தையும் மீட்டலாம். இந்தப் பேச்சுடன் இந்தச் சருக்கம் முடிவடைகின்றது. கதை யின் நடுவை இங்குக்காண முடிகின்றது. துகிலுரிதல் சருக்கத்திலும், சபதச் சருக்கத்திலும் கதை, யின் உச்சநிலையைக் (Cimax) காண்கின்றோம். துகிலுரிதல் சருக்கத்தில் திரெளபதியைப் பணயமாக வைத்து இழித்தல் கெளரவர்கள் அடைந்த மகிழ்ச்சி, துரியோதனின் மட்டற்ற களிப்பு, அவன் பஞ்சாலியை மன்றுக்கு அழைத்து வருமாறு விதுரனைக் கேட்டல், விதுரனின் அறவுரை, தேர்ப்பாகனை இருமுறை அனுப்பியும் அவளால் திரெளபதியை அழைத்து வர இயலாமை, துச்சாதனனை அனுப்புதல்-இவை யாவும், துகிலுரிதல் சருக்க நிகழ்ச்சிகளாக அமைந்து கதையின் உச்ச நிலையை அடையத் துணை செய்கின்றன. அடுத்து வரும் *பதச் சகுக்கத்தில் திரெளபதியைத் துச்சாதனன் கூந்தலைப் பற்றி இழுத்துவரல், ஊரவர் இக்காட்சியைக் கண்டு நெஞ்சங் கவல்தல், அரசவையில் கன்னெஞ்சமும் உருகுமாறு திரெளபதி நீதி கேட்டு அழுதல். வீடுமனின் கையாலாகாத பேச்சு, திரெளபதியின் மறு மொழி, வீமன் வெகுண்டு தருமனின் கையை எரிப்பதற்குச் சகாதேவனை எரிதழல் கொண்டு வருமாறு ஏவுதல், அருச்சுனன் வீமனை அமைதிப் படுத்தல், விகர்ணனின் எச்சரிக்கை, துச்சாதனன் பாஞ்சாலி யின் ஆடையைக் களையத் தொடங்குதல், கண்ணனின்