பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத்தின் ஒருமைப்பாடு 39 திருவருளால் துகில் எண்ணத்திலடங்காத நிறங்களைக் கொண்டு, புதுப் புதுக் கோலங்களாக, பொன்னிழையும் பட்டிழையும் கொண்டதாக வளரத் தொடங்குதல் - இவை விரைந்து தொடர்ந்து நடைபெறும் வரையிலும் கதை கொடுமுடியினை எட்டுவதைக் காணலாம். இறுதிச் சருக்கத்தில் (சபதச் சருக்கத்தில்) வீமன், அருச்சுனன், திரெளபதி ஆகியோர் சபதம் செய்தல் ஆகிய நிகழ்ச்சிகளில் கதையின் முடிவு தென்படுகின்றது. சபதங் களினால் கதையின் விளக்கம் தெளிவாக்கப்பெறுகின்றது. பாஞ்சாலி செய்த சபதம் காவியத்தின் பெயராகவே அமைந்தும் விடுகின்றது. பெண்மைக்கு - தாய்க்குலத்திற்கு-ஏற்றங்காட்டிய தமிழ் இலக்கிய மரபினை நன்கு கருத்தில் கொண்டவர் பாரதி. மணிமேகலை, சிலப்பதிகாரம் என்ற பெண் தொடர்பால் பெயர் பெற்ற காப்பியங்களை மனத்திற்கொண்டு இதற்குப் பாஞ்சாவி சபதம்’ என்று பெண்ணின் பெயரையே இட்டுள் ளார் என்று கருதுவது பொருத்தமாகத் தோன்றுகின்றது. அதற்கேற்றவாறு காவியப் போக்கையும் அமைந்துள்ளார் என்று கருதவும் இடத் தருகின்றது. இதிகாச சிரேஷ்டமான பூரீராமாயணத்தால் சிறையிருந்தவள் ஏற்றம் சொல்லுகின்றது." என்ற வாக்கையும் பாரதி நினைவில் கொண்டிருத்தல் வேண்டும். பெண்மை வாழ்கென்று கூத்திடுவோ மடா!" என்று பெண்மையைப் போற்றுபவர் பெண் பெயரால் காவியத்தை வழங்கினார் என்று கொள்வதும் பொருத்த மாகும். 3. பூர்வசனபூஷணம் -5 (புருடோத்தம நாயுடு பதிப்பு) 4. பல்வகைப்பாடல்கள் , 5 பெண்மை