பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத்தில் - திரெளபதி 4.i. ஒவியம் நிகர்த்தவளை-அருள் ஒளியினைக் கற்பனைக் குயிரதனைத் தேவியை, நிலத்திருவை-எங்குந் தேடினும் கிடைப்பருந் திரவியத்தை. படிமிசை இசையுறவே-நடை பயின்றிடுந் தெய்விக மலர்க்கொடியைக் கடிகமழ் மின்னுருவை,-ஒரு கமனியக் கனவினைக் காதலினை, வடிவுறு பேரழகை,-இன்ப வளத்தினைச் சூதினில் பணயம்என்றே கொடியவர் அவைக்களத்தில்-அறக் கோமகன் வைத்திடல் குறித்து விட்டான்." என்று கூறுவார். ஐவர் பூவை' என்றும் குறிப்பிடுவார். இவளைக் கவிஞர் குறிப்பிடும் உருவகங்களை-சொல்லோவி யங்களை - உருக் காட்சிகளை (imagery) - மரபுக் கவிதை களில் அமைத்தால் ஒவ்வோர் உருவகத்திற்கும் ஒவ்வொரு வெண்பாவோ விருத்தமோ அமையும். இவற்றுள், படிமிசை இசையுறவே-நடை பயின்றிடும் தெய்விக மலர்க்கொடி என்ற தொடர் நாடு முழுவதும் இப்பெருமாட்டிக்குக் கோயில் அமைந்துள்ள செய்தியைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். பல்லாண்டுகளாக ஆந்திரப் பல்கலைக்கழகத்தை நிறுவக் காரணமாக இருந்தவரும், அதன் துணைவேந்தர் பதவியைப் பல்லாண்டுகள் அணி செய்தவருமான டாக்டர் சி.ஆர் ரெட்டி பவர்கட்குத் தெலுங்கு மகாபாரதத்தில் தனி ஈடுபாடு ఒు. அங்ஙனமே திரெளபதி என்ற பாத்திரமும் இவருடைய தனிப் 1. பா.ச.4.52:243,244