பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பாஞ்சாலி சபதம் பற்றுக்குரியவளாக இருந்தாள். பஞ்சமி என்ற தம்முடைய ஐந்து கட்டுரைகள் கொண்ட நூலில் சேர்க்கப்பெற்றுள்ள கட்டுரையொன்றில் சீதையையும் திரெளபதியையும் அறிவுக் கூர்மையுடன் ஒப்பிட்டு ஆய்ந்துள்ளார். இந்த நாட்டில் சீதை ஊழிக்காலம் தொட்டு பெண்ணினத்தின் மிகச் சிறந்த மூல மாதிரியாக இருந்து வருகின்றாள் என்பதை நாம் அறி வோம். ஆனாலும் டாக்டர் ரெட்டியவர்கள் பற்றுறுதி, பொறுமை, குடிப்பண்பு, துன்பத்தை அநுபவிக்கும் திறன் போன்ற சீதையின் நற்குணங்களில் தனி ஈடுபாட்டைக் காட்டுகின்றார். ஆனால், திரெளபதிதான் தன்னுடைய துணி வாலும், விரைந்து மாறும் இயல்பாலும் டாக்டர் ரெட்டி அவர்களின் ஆண் இதயத்தை அதிகமாகக் கவர்கின்றாள் இவர் கூறுவார்: "திரெளபதியைப் போலலே சீதையும் உலகோரின் இதயத்தைக் கவர்ந்துள்ளாள்; ஆனால் அவள் இல்லத்திலுள்ள ஒரு விளக்கேயாவாள்; கொழுந்து விட்டெரி பும் அனற் பிழம்பு அல்லள். பொது மக்களுக்குரிய மன்றத் திற்கும் பொருத்தமானவள் அல்லள். இவற்றின் சுவையும் மனப்பாங்கும் இல்லாத ஓர் இல்லக் கிழத்தி இவள். இவள் சொல் நயமுடைய வாதப் போருக்கும் பொது மன்றப் போருக்கும், நேருக்கு நேர் நேரிடும் மோதல்கட்கும் சிறிதும் பொருத்தமானவள் அல்லள். இவள் வெல்லம் போல் இனிமை யானவள்: மிளகு போன்ற காரசாரத்திற்கு இவள் பண்பில் இடமே இல்லை...... திரெளபதியைப் பொறுத்த மட்டிலும் இக்கால அமெரிக்கப் பெண் தலைவர்களும் இவளுடன் ஒப்பிடப்பெறும்பொழுது அவர்கள் தம்மை அடிமை களாவே உணர்வர். இவளுடைய அறிவுத் திறனும் பாகு படுத்திப் பார்க்குந்திறனும், பொது அறிவும், கூரிய அரசிய லறிவும், துணிவும் உயர்பண்பும், தனிப்பட்ட சொந்தக் கவர்ச்சியும் இவளுடைய சுதந்திர உணர்ச்சிக்கு அடிப்படை யாக இருந்தன. தன்னுடைய கணவன்மார்களைக் கடிந்