பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்முகம் ஆத்திசூடி, இளம்பிறை யணிந்து மோனத் திருக்கும் முழுவெண் மேனியான் கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்; மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்; ஏசுவின் தந்தை; எனப்பல மதத்தினர் உருவகத் தாலே உணர்ந்துன ராது பல்வகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்; அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்; அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்." -பாரதியார் "பாஞ்சாலி சபதம்’ என்ற இச் சிறு காவியம் பாரதி யாரின் சுவை மிகுந்த அற்புதப் படைப்பு, ஒதற் கெளிதாய் இருந்தாலும் சில பகுதிகள் உணர்தற்கரியனவாயும் சிந்தைக்கு விருந்தாகவும் இருப்பதை இதனை ஆழ்ந்து கற் போர்தாம் அறியமுடியும். கல்விச் செருக்குடைய புலவர் கள் களிக்கும் கற்பனை முறைகளையும் அணிகளையும் கை யாண்டு -ஆனால் எளிய சொற்களையும் சாதாரண மக்க ளின் பேச்சுகளில் காணப்பெறும் சொற்களையும் பயன் படுத்தி- சுவை மிகுந்த ஒர் அரிய சிறு காவியத்தைப் படைத்ததில் பாரதிக்கு நிகர் பாரதிதான் என்பதைக் காவியத்தை ஊன்றிப் படித்துத் துய்ப்போர்தாம் அறிதல் முடியும்; உணர்ந்து தெளிதலும் இயலும், வானொலியிலும் தொலைக் காட்சிகளிலும் இக்காவி யத்தைச் சுட்டியும் குறைத்தும் ஒலி/ஒளி பரப்பப்பெற்ற போதிலும், பல்கலைக் கழகப் பாடத் திட்டத்தில் இக்காவியம் 1, புதிய ஆத்திகுடிகாப்பு (பரம்பொருள் வாழ்த்து).