பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பாஞ்சாலி சபதம் தேவி திரெளபதி சொல்வாள்:-ஒம் தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன் பாவி துச்சாதனன் செந்நீர்-அந்தப் பாழ்த்துரியோதனன் ஆக்கை இரத்தம் மேவி இரண்டும் கலந்து- குழல் மீதினிற் பூசி நறுநெய் குளித்தே சிவிக் குழல் முடிப்பேன் யான்-இது செய்யுமுன்னேமுடியேன் என்றுரைத்தாள்.' இங்குக் கவிஞர் திரெளபதியையே பராசக்தியாகக் காண் கின்றார் போல் தோன்றுகின்றது. அவர் மனம் சுதந்திர தேவியின் தரிசனத்தை எதிர் நோக்கி இருத்தல் போலவும் தோன்றுகின்றது. நம்நாடு சுதந்திரம் அடைந்ததற்கு முன்பு பாடிய காவியம் அல்லவா? இப்படிக் காவிய நாயகி சிறந்த முறையில் காட்சி அளிக்கின்றாள். கவிஞர் பழைய இதிகாசப் பாத்திரத்தையே புதுமெரு கூட்டி அற்புதப் படைப்பாக்கி விடுகின்றார். பாமர மக்கள் மனத்தில் ஊறிக்கிடந்த "திரெளபதி அம்மன் என்ற கருத்து நம் கவிஞருக்குக் கை கொடுத்து உதவியிருப்பதாக எண்ணுவதில் இருவேறு சிந்தனை இருக்க முடியாது. 11. കൂ, 5,73:307