பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ق) - نخلاقی காவியத்தின் எதிர்த்தலைவன்: துரியோதனன் இராமகாதையில் இராவணன் எதிர்த்தலைவனாக அமைந்திருப்பதுபோல் பாஞ்சாலி சபதம் என்ற இச்சிறு காவியத்திற்குத் துரியோதனன் எதிர்த்தலைவனாக அமை கின்றான். காவியத்தில் நடைபெறும் அடாத செயல்கட்கெல் லாம் இவனே பெருவிசையாக - முதன்மைக் கருவியாகஅமைந்திருப்பதால் இவனை எதிர்த்தலைவனாகக் கொள் வது பல்லாற்றானும் பொருந்தும். இவன் கண்ணிலான்திருதராட்டிரனுக்கு முதல் மகன். திருதராட்டிரன் நல்ல அமைச்சரவையைக் கொண்டு நல்லாட்சி புரிய முயன்றாலும் அனைத்துச் செயல்களிலும் இவன் கைதான் ஓங்கி நிற்கின் றது. இதனால்தான் கவிஞர் இவனை, தந்தைசொல் நெறிப்படியே-இந்தத் தடந்தோள் மன்னவன் அரசிருந்தான்' என்று குறிப்பிடுகின்றார். இவன் அரவக் கொடி உயர்த்தி, ஆட்சி புரிந்து வந்ததாக அறிகின்றோம். துரியோதனன் தீய குணங்களின் இருப்பிடமாகத் திகழ் பவன். பொது மக்கள் மனத்தில் 'வணங்கா முடி’ என்ற திரு 1. பா.ச. 1.4:17.