பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பாஞ்சாலி சபதம் நாமத்தால் நிலைத்து வாழ்பவன். சிற்றுார்களில் பாரதம் படிக்கும் பெரியோர்கள் இவன் உள்ளங்காலிலும் உரோமம் முளைத்திருப்பதாகச் சொல்லிக் கிண்டல் செய்வர். அந்த அளவுக்குக் கால்களைப் பயன்படுத்தாத காலி என்று சுட்டு வர். இவனைக் கவிஞர் முடி பணி வறியான்' என்றே குறிப் பிடுவர். பல இடங்களில் இங்வனம் பொது மக்கள் கருத்தினைக் காவியத்தில் பொதிய வைத்துக் கவிதையைக் கவின்பெறச் செய்வர். நெஞ்சத் துணிவுடைய இவன் உடல் வலியை, ‘கரியோ ராயிரத் தின்-வலி காட்டிடு வோன் என்றக் கவிஞர்பிரான் பெரியோன் வேதமுனி -அன்று பேசிடும் படிதிகழும் தோள்வலி யோன்" என்று கவிஞர் காட்டுவர். இவன் அரசவையில் அறம் அறிந்த அந்தமில் புகழுடைய வீட்டுமன், வந்தனை பெருங்குரவர் tதுரோணர், கிருபர்) மெய்ந்நெறியுணர்ந்த விதுரன் முதலி யோர் இருந்தனர். இதனைக் கவிஞர், கேள்வி பல உடையோர், கேடிலா நல்லிசையோர், வேள்வி தவங்கள் மிகப் புரிந்த வேதியர்கள் மேலோர் இருக்கின்றார்." என்று வேறோர் இடத்தில் காட்டுவர். இன்று மாநில அரசு களிலும் மைய அரசிலும் உள்ள அமைச்சர்கள் தலைமை யமைச்சர், முதல் அமைச்சர்களிடம் வாயடைத்துப் போய் வாளா இருப்பதுபோல் இவர்களும் வாக்கின்றி--செல்வாக் கின்றித் திகழ்கின்றனர்! துரியோதனும் எல்லாச் செயல்களை 2. டிெ.1.4:16 3. டிெ 1:4.16 4. டிெ,5,63:35.57