பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 பாஞ்சாலி சபதம் -பிறர் செந்திருவைக் கண்டு வெம்பியே-உளம் தேம்புதல் பேதமை என்கின்றான்; தந்திரத் தேர்ந்தவர் தம்மிலே - எங்கள் தந்தையை ஒப்பவர் இல்லைகாண்! மாதர்தம் இன்பம் எனக்கென்றான்; . புவி மண்டலத் தாட்சி அவர்க்கென்றான்; - நல்ல சாதமும் நெய்யும் எனக்கென்றான் - எங்கும் சாற்றிடும் கீர்த்தி அவர்க்கென்றான்; அட ஆதர விங்கனம் பிள்ளைமேல்-வைக்கும் அப்பன் உலகினில் வேறுண்டோ?" இவ்வாறு பல்வேறு விதமாகத் தந்தையைக் கிண்டல்’ செய்தவன் தந்தையை நோக்கி, -உயிர்ச் சோதரர் பாண்டவர் தந்தைநீ - குறை சொல்ல இனியிட மேதையா! என்று எள்ளல் குறிப்புடன் பேசுகின்றான். சற்றுத் தாழ்ந்து செல்பவன்போல் தன்னைக் காட்டிக் கொண்டு தொடர்ந்து பேசுவான். சொல்லின் நயங்கள் அறிந்திலேன், . உனைச் சொல்லில் வெல்ல விரும்பிலேன் - கருங் கல்லிடை நாருரிப் பாருண்டோ? - நினைக் காரணங் காட்டுத லாகுமோ? - என்னைக் கொல்லினும் வேறெது செய்யினும், - நெஞ்சில் கொண்ட கருத்தை விடுகிலேன்; . அந்தப் புல்லிய பாண்டவர் மேம்படக் - கண்டு போற்றி உயிர்கொண் டுவாழ்கிலேன்' டிெ 1, 10: 56, 88, 89 10. 11. டிெ. 1.: 10. 90