பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்த்தலைவன் - துரியோதனன் 61 சென்று விளைவெல்லாம் செவ்வனே தானுணர்த்தி 'மன்றிடை யுள்ளான் நின்மைத்துனன் நின் ஒர் தலைவன். நின்னை அழைக்கின்றான் நீள்மனையில் ஏவலுக்கே’’ என்ன உரைத்தவளை இங்குக் கொணர்வாய்” என்று கூறுவதில் நாகரிகமற்ற தன்மையும் கயமையும் பளிச் சிடுகின்றன. குடும்ப நலத்தின்பொருட்டும் உலக நலத் தின்பொருட்டும் தன் பொறுமையை இழக்காமல் தனியாக துரியோதனனுக்கும் பொதுவாககெளரவர்கட்கும் அறிவுரை, அறவுரை கூறுகின்றான். இதனைச் செவிமடுக்காது பாஞ் சாவியை அழைத்து வருமாறு தேர்ப்பாகனை அனுப்பு கிறான் துரியோதனன். அவனும் சென்று இயலாமையுடன் திரும்புகின்றான்.பின்னர்துச்சாதனனை அனுப்ப,அந்த நீசன் பாண்டவர்தம் தேவியின் நீண்ட குழலைப் பற்றி இழுத்து வந்து துகிலுரிந்து அவமானப்படுத்தினதை நாம் அறிவோம். இச்செயல்கட்கெல்லாம் பொறுப்பாளி சுயோதனன் அன்றோ? rer:Eణజిజిజాజsయా:సోలో - 22. டிெ 4.56, 252.அடி 36-43