பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-7 பிற காவிய மாந்தர்கள் கதையில் வரும் நிகழ்ச்சிகளின் உயர்வு காவியமாந்தர் களின் தகுதியால் சிறப்படையக் கூடியதாக அமையும். பாரதத்திலுள்ள கதை மாந்தர்களின் குண நலன்கள்பற்றி நாம் ஒரளவு நன்றாகவே அறிந்துள்ளோம். ஆனால், "பாஞ்சாலி சபதத்தில் பாரதி அவர்கட்குப் புது மெருகு ஊட்டியிருப்பதில் ஒரு தனிப்பட்ட உயிர்த்தத்துவம் மிளிர் கின்றது. பாரதி காட்டும் காவிய மாந்தர்களின் குண நலன் களைப்பற்றி ஒரு சிறிது காண்போம். க. திருதராட்டிசன் வில்லி திருதராட்டிரனை ஒர் அயோக்கியனாகவே காட்டுகின்றார் என்று சொல்ல வேண்டும். விரகினுக் கோர் வீடு போல்வான்' என்பது வில்லி காட்டும் திருதராட்டிரனைப்பற்றிய சொல்லோ வியம். இங்கு தந்தையைக் கேட்காமலேயே துரியோதனன் மண்டபம் சமைத்து விடுகின்றான். மண்டப வேலை முற்றுப் பெற்றபின் தன் மனக் கருத்தைத் தந்தையிடம் வெளியிடுகின்றான். அதனைக் கேட்ட தந்தை மகிழ்வடை வதுபோல் காட்டுகின்றார் வில்லி. மகன் மொழி நயந்து கேட்டு வாழ்வுறு தந்தை தானும் 'மிகநயந் துருகி நல்ல விரகினால் வெல்ல றுற்றீர்!