பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற காவிய மாந்தர்கள் 63 அகநெடும் போர்செய் தாலும் ஐவரை அடக்கொ னாது; சகுனியை யன்றி வேறார் தரவல்லார் தரணி என்றான்." என்று கூறும் தந்தையைக் காண்கின்றோம். இங்குச் சகுனி யின் சூழ்ச்சியைத் திருதராட்டிரன் மெச்சிப் பாராட்டுகின் றான். மைந்தன் கருத்துப்படியே பாண்டவர்களை அழைத்து வருமாறு விதுரனை இந்திரப் பிரத்தத்துக்கு அனுப்பி வைக் கின்றான். ஆனால், பாரதியார் காட்டும் திருதராட்டிரனோ ஒர் உத்தமன். வெற்றி வேற்கைப் பரதர்தங் கோமான் மேன்மை கொண்ட விழியகத் துள்ளோன், பெற்றி மிக்க விதுரன் அறிவைப் பின்னும் மற்றொரு கண்ணெனக் கொண்டோன் முற்று ணதிரித ராட்டிரன்" என்பது கவிஞர் காட்டும் திருதராட்டிரனைப்பற்றிய சொல் லோவியம். புறக்கண் செயற்படாவினும் சிந்தித்து உணரும் அகக்கண் இவனுக்கு உண்டென்பது கவிஞரின் மதிப்பீடு. மற்றொருகண் விதுரனின் அறிவு. விதுரனைக் கலந்து நன்கு சிந்தித்துதான் செயற்படுவான் என்று கவிஞர் நமக்கு இவனை அறிமுகப்படுத்துகின்றார். இவன் தன் மைந்தனின் மனக் கருத்தைச் சகுனி மூலம் அறிகின்றான். சினம் பொங்கி எழுகின்றது. சகுனியை நோக்கி, 1, வில்லிபாரதம்-குதுப்போர்.49 2. பா. ச. 1.10:84