பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ பாஞ்சாலி சபதம் பிள்ளையை நாசம் புரியவே-ஒரு பேயென நீவந்து தோன்றினாய்;-பெரு வெள்ளத்தைப் புல்லொன் றெதிர்க்குமே?-இள வேந்தரை நாம்வெல்ல லாகுமோ?? என்று கூறுகின்றான். மேலும் அவன், சோதரர் தம்முட் பகையுண்டோ?-- சுற்றத்திலே பெருஞ் செற்றமோ? என்றும் கேட்கின்றான். இதற்கு முன் ஆயிரம் சூழ்ச்சியால் பாண்டவரை அழிக்க முயன்றதையும் அவை யாவும் அந்தச் சீதரன் தண்ணருளாலும், பாண்டவர் தம் சீலத்தாலும், புய வவியாலும் பயன்படாது போனமையையும் எடுத்துக் காட்டு கின்றான். இவர்கள் செய்வதெல்லாம் வீணாக முடியு மென்றும், அவை சான்றோர் கருத்துக்கு மாறானவை என்று கூறுபவன், நொள்ளைக் கதைகள் கதைக்கின்றாய் -பழ நூலின் பொருளைச் சிதைக்கின்றாய்" என்கின்றான். --ഥങ്ങr: கவலை வளர்த்திடல் வேண்டுவோர்-ஒரு காரணம் காணுதல் கஷ்டமோ?" என்றும் கேட்கின்றான். 3. டிெ 19:71 4. டிெ. 1.9.73 5. டிெ, 1.9:77