பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற காவிய மாந்தர்கள் 69 ஒர்ந்திடு சாத்திரப் போர் - தனில் உணர்ந்தவன் வென்றிட, உணராதான் சோர்ந்தழி வெய்திடுவான்; -இவை சூதென்றும் சதிளன்றும் சொல்வாரோ?' என்று தனது கொள்கைக்கு அரண் அமைத்துக் கொள்ளுகின் றான். இத்துடன் விட்டானா? வல்லமர் செய்திடவே - இந்த - மன்னர்முன் னேநினை அழைத்துவிட்டேன், சொல்லுக வருவதுண் டேல் - மனத் துணிவிலை யேலதும் சொல்லு கென்றான்' தருமனுக்கு வாய் ஓடவில்லை; சகுனியின் சவால் அழைப்பை ஒரு கெளரவப் பிரச்சினையாக ஏற்றுக் கொள்ள வேண்டிய தாயிற்று. பொய்ய தாகுஞ் சிறு வழக் கொன்றைப் புலனி லாதவர் தம்முடம் பாட்டை ஐயன் நெஞ்சில் அறமெனக் கொண்டான்.'" என்கின்றார் கவிஞர். தருமனும், வெய்யதான விதியை நினைந்தான். அற உணர்வையும் மாற்றும் ஆற்றலுடை யது விதி என்ற உண்மையையும் உணர்த்துகின்றார் கவிஞர். இதனை வற்புறுத்தும் முறையில், மதிய னும்விதி தான்பெரி தன்றோ? வைய மீதுள வாகு மவற்றுள் விதியி னும்பெரி தோர்பொரு ளுண்டோ? மேலை நாம்செய்யுங் கர்மமல் லாதே. 15. ആു: 2, 35. 176 16, ബു: 2:35:177 17. டிெ. 2, 36; 178