பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பாஞ்சாலி சபதம் நதியி லுள்ள சிறுகுழி தன்னில் நான்கு திக்கி லிருந்தும் பல்மாக பதியு மாறு, பிறர் செய்யுங் கர்மப் பயனும் நம்மை அடைவ தொன்றன்றோ?' ' என்று கூறி அதற்கு அரியதோர் உவமையின் வாயிலாக ஒரு நியாயத்தையும் காட்டுகின்றார் கவிஞர். எவ்வளவு அறவுணர்வு மிக்கோனாயினும் தவறான வழியில் இறங்கி விட்டால் தடம் மாறாமல் போக வேண்டி யதுதான் என்பதற்குத் தருமன் ஓர் எடுத்துக்காட்டாக அமைகின்றான். குடிவெறியும் காம வெறியும் மேலும் மேலும் அப்பாதையை விட்டு விலக முடியாமல் செய்வது போலவே, குதுப் பழக்கமும் அந்நெறியிலேயே கொண்டு செலுத்தும். இழத்தொறுாஉங் காதலிக்கும் குது என்பார் வள்ளுவப் பெருந்தகை. தருமனும் அல்வழியில் இறங்கி செல்வம், நாடு முதலியவற்றை யெல்லாம் இழந்து தம்பிய ரையும் தன்னையும் . ஏன் தன் துணைவியையும் - வைத் திழக்கும் எல்லைக்குப் போய்விடுகின்றான். பொறுமைக்கு ஒர் எடுத்துக் காட்டாக விளங்குபவன் தருமன். எல்லாவற்றையும் இழந்த நிலையில் கர்ணன் :மார்பிலே துணியைத் தாங்கும் வழக்கம் கீழ் அடியார்க் கில்லை. யாரடா பணியாள்! பாண்டவர் மார்பிலேந்தும் சீரையும் களைவாய்; தையல் சேலையும் களைவாய்' என்று கூறும்போதும், திரெளபதி அவையில் போந்து, விதியோ கணவரே! அம்மி மிதித்து அருந்ததியைக் காட்டி எனை, வேதச் சுடர்த்முன் வேண்டி மனம் செய்து, பாதகர்முன் இந்நாள் பரிசழிதல் காண்பீரோ? என்று கேட்கும்போதும் தருமன் ஊமையன்போல் ஒன்றும் பேசாதிருக்கின்றான். _18_মে, 2. 35 182