பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற காவிய மாந்தர்கள் 73 எச்சரிப்பதால் பாண்டவர்கள்மீது இவன் கொண்டிருந்த பேரன்பு தெளிவாகின்றது. மேலும், திருதராட்டிரன் தன் மைந்தனுக்கு உரைத்த நீதிகள் பலவற்றையும், அவன்'மது மிகுத்துண்டவன்போல் ஒரு வார்த்தையையேபற்றிப் பிதற்று வதையும் தெளிவாக எடுத்துரைக்கின்றான். கெளரவர்களிடம் இவனுக்குப் பாசம் இல்லை யென்று சொல்லுவதற்கில்லை. இவன் அவர்களிடம் அன்பு காட்டு வது அவர்கள் தகாத முறையில் செயற்படும்போதுதான் வள்ளுவப் பெருந்தகை நட்புபற்றி, நடுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு’ என்று கூறுவது உறவுடையார் இடித்துக் கூறி அன்பு காட்டு வதற்கும் பொருந்தும். எல்லாவற்றையும் இழந்து நிற்கும் தருமனை நோக்கி, நாடிழக்க வில்லை,-தருமா நாட்டை வைத்திடு" என்று சகுனி கூறுவதைக் கேட்டு வெகுண்ட இவன், ஐய கோஇதை யாதெனச் சொல்வோம்? அரச ரானவர் செய்குவ தொன்றோ? மெய்ய தாகவோர் மண்டலத் தாட்சி வென்று குதினில் ஆளுங் கருத்தோ? வையம் இஃது பொறுத்திடு மோ?மேல் வான்பொறுத்திடுமோ?பழி மக்காள்! துய்ய சீர்த்தி மதிக்குல மோநாம்? துர வென் றெள்ளிச்' 23. குறள் - 7.84 24. டிெ. 2, 37:195 25. டிெ. 2, 38:196