பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற காவிய மாந்தர்கள் 75 விற்று மயில்களைக் கொள்வாய். கண்கள்தாம் உனக்கு இல்லை யென்றால் காதுகளையும் இழந்தனையோ? காடு வா’ என்றும், வீடு போ வென்றும் கூறும் இத்தள்ளாத வயதில் தம்பி மக்களின் பொருளை வெஃகுவாயோ? தம்பி மக்கள் நின்னைத் தலைவர் என்று கொண்டனரன்றோ? நீ விரும்பினால் தம் பொருள்களை யெல்லாம் நினக்குத் தான மாகக் கொடுப்பார்களே. அங்ஙனமிருக்க, பாழ்நகரில் வீழ்த்தும் கொடிய செய்கையைத் தொடர்வது என் காரண Gudfr?** மேலும் தொடர்கின்றான்: ‘'நீ குருகுலத் தலைவன். உன் அவையில் கொற்றம் மிக்க துரோணன், கிருடன், புகழ் மிக்கோங்கிய கங்கையின் மைந்தன் இருக்கின்றனர். பேதை யாகிய அடியேனும்தான் இருக்கின்றேன், இப்பெரியர்ர் களின் மதிப்பு இழந்து போகும் நிலையில் சகுனியின் பேச்சு அம்பலம் ஏறுதல் நன்று, நன்று! இச்சீரியோர் அருகில் அவன் 'வீற்றிருக்கத் தகுதி உள்ளவனா? அவனை வெற்பிடை விரட்டுவது தான்" தகுதியான செயல் ஆகும். நெறியல்லா நெறிசென்று வாழ்வதில் இன்பம் உண்டாகும் எனக் கருதுதல் வேண்டா. அறிவு கெட்ட சகுனியின் சூதால் புண்ணியரான பாண்டவர்களைப் ப ைகவ ர் க ளா கி க் கொள்வல்தகுமா? உலகெல்லாம் நம்மைச் சிறியர் பாதகர் என்று ஏச, நீ அதனை உகந்து அரசாள விரும்புகின்றாயா? சூதை மேலும் தொடராமல் நிறுத்துக; நீ வாழ்க’ என்று தன் உரையை முடிக்கின்றான். துரியோதனன் தன் அற வுரையை ஏற்கான் என்று தெரிந்தே அறவுரை கூறுகின்றான். 27 கவிஞரின் குறிப்பு: காந்தாரத்து மலை நாட்டிலிருந்து வந்தவனாதலால், சகுனியை மீட்டும் அவனது மலை நாட்டுக்கு அனுப்பி விடுக’ என்று சொல்லியது.