பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பாஞ்சாலி சபதம் விதுரன் எதிர்ப்பார்த்த படியே துரியோதனன் இவன் அறவுரையை ஏற்கவில்லை. மாறாகச் சிறியதந்தைமீது வசை மாரி பொழிகின்றான். இவற்றையும் பொறுத்துக்கொண்டு மீண்டும் அறம் உரைக்கின்றான் விதுரன். நெறியறியா மன்னன் ஒருவன் அரசர் அவையில் வடுச் சொல் கூறி ஏசி னாலும் உண்மை நெறியொழுகும் அமைச்சன் அணுவளவும் குழப்பம் அடையான். இந்நிலையில் விதுரன் பேச்சு: "மகனே, நின்னை நல்வழியில் திருப்ப நினைத்தேன். ஆனால் விதி என்னைப் புறம் தள்ளுகின்றது. கடுஞ் சொற்கள் பொறுக்காத மென்மைக் காதும்,கருங்கல்லில் விடந்தோய்ந்த நெஞ்சும் கொண்டோர் நிகழ்ச்சி தோன்றும் முன்னரே அழிவர். ஆனால், பால்போலும் தேன்போலும் இனிமை யாகப் பேசுவோர் அழிவுக்கு வழி காட்டுவர். நன்மையை நாடு வோர் பசப்பு மொழி பகரார் காண். நீயோ நெடுமரம்போல் வளர்ந்து விட்டாய், இடித்துரைப்போர் மொழி நின் செவி யில் ஏறுவதில்லை. நின் அவையில் அறம் உரைக்கும் பார்ப் பார் அமைச்சராக இருப்பதற்குத் தகுதி பெற்றிலர்! கச்சணிந்த வேசை மாதர், சிறுமைக்குத் தலை கொடுக்கும் தொண்டர், குலங்கெட்ட புலை நீசர். முடவர், பித்தர் இவர்களே நினக்கு அமைச்சராக இருப்பதற்குத் தகுதி பெற்றவர்கள்.' "நான் நின்னோடு இருந்தாலும் நின்னை விட்டு அகன் றாலும் எனக்கு வருவது ஒன்று மில்லை. இதுகாறும் கூறியவை நினக்கு அன்று. அவையில் வீற்றிருக்கும் மன்னர், பார்ப்பார், மதியில்லா அண்ணன் (நின் அப்பன்) இவர்கட் காகவே எடுத்துரைத்தேன். நடப்பவை இன்றோடு முடி வதில்லை. எதிர் காலத்தில் என்னென்ன வரும் என்பதை யான் அறிவேன். நின் பிதாமகன் வீட்டுமனும் அறிவான். அவனோ ஆசைகளை வென்ற யோகியாகிப் பேசாதிருக்