பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற காவிய மாந்தர்கள் 79 இவரோடு ஒத்து வாழ வழி ஏது? இருநெருப்பினுக்கிடையில் நாம் விறகோ? இங்கு வீமனின் உட்கிடக்கையைக் காட்டு கின்றார் கவிஞர். துச்சாதனன் திரெளபதியை மன்றுக்கு இழுத்து வருக் கால், அவள் அம்புபட்ட மான்போல் அழுது துடிதுடிக்கின் றாள்; ஆடைகுலைவுற்று நிற்கின்றாள்; 'ஆ வென்று அழுது துடிக்கின்றாள் அவளது மைகுழல்பற்றி இழுக்கும் துச்சாதனனை வீமன் காண்கின்றான். அவனது வெஞ்சினம் கரைமீறி எழுகின்றது. தருமனை நோக்கிப் பேசுகிறான்: சூதர் மனைகளிலே-அண்ணே! தொண்டு மகளி ருண்டு சூதில் பணய மென்றே-அங்கோர் தொண்டச்சி போவதில்லை . ஏது கருதி வைத்தாய்? அண்ணே யாரைப் பணயம் வைத்தாய்? மாதர் குலவிளக்கை-அன்பே வாய்ந்த வடிவழகை. பூமி யரச ரெல்லாம் . கண்டே போற்ற விளங்கு கின்றாள். சாமி, புகழினுக்கே- வெம்போர்ச் சண்டனப் பாஞ்சாலன். அவன் சுடர்மகளை-அண்ணே! ஆடி யிழந்து விட்டாய் தவறு செய்து விட்டாய்-அண்ணே! தருமங் கொன்று விட்டாய் சோரத்திற் கொண்டதில்லை;-அண்ணே! சூதிற் படைத்த தில்லை