பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பாஞ்சாலி சபதம் துச்சாதனன் பாஞ்சாலியை அவைக்கு இழுத்து வரும் அவல நிலையைக் காணும் வீமனின் வெஞ்சினம் கரைமீறி எழுந்து, "கதிரை வைத்திழந்தான்-அண்ணன் கையை எரித்திடு வோம்’** என்று சகாதேவனை நோக்கிப் பேசும்போது அதனை எதிர்த்துச் சொல்லும் வில்விசயனைக் காண்கின்றோம். 'மனமாறச் சொன்னாயோ? வீமா! என்ன வார்த்தை சொன்னாய்? எங்குசொன்னாய்? யாவர் முன்னே? கனமாருந் துருபதனார் மகளைச் சூதுக் களியிலே இழந்திடுதல் குற்ற மென்றாய்; சினமான தீஅறிவைப் புகைத்த லாலே திரிலோக நாயகனைச் சினந்து சொன்னாய். 'தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும்' எனுமியற்கை மருமத்தை நம்மாலே உலகம் கற்கும் வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்; கருமத்தை மேன்மேலும் காண்போம்; இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம். காலம் - மாறும்; தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்; தனுஉண்டு காண்டிவம் அதன் பேர் என்று நெருக்கடி நிலையிலும் மன அமைதி குலையாதிருக்கும் அருச்சுனனைக் காண்கின்றோம். பின்னர், கண்ணனின் கீதை யைக் கேட்கும் பரிபக்குவ மனநிலையைக் கொண்டவன் என்பதை ஒருவாறு ஊகமும் செய்கின்றோம். - 34. டிெ 5, 66; 281 35. டிெ 5, 67: 282-283