பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற காவிய மாந்தர்கள் 85 இறுதியாக, காவியத்தின் இறுதியில் வீமனுக்கு அடுத்து சபதம் செய்தவன் இக் கோமகன். இதனைக் கவிஞர், பார்த்தன் எழுந்துரை செய்வான்:- 'இந்தப் பாதகக் கர்ணனைப் போரில் மடிப்பேன். தீர்த்தன் பெரும்புகழ் விஷ்ணு-எங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழலானை: கார்த்தடங் கண்ணி எந்தேவி அவள் கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை; போர்த்தொழில் விந்தைகள் காண்பாய்,-ஹே! பூதலமே! அந்தப் போதினில் என்றான்." என்று காட்டுவர். பார்த்தன் தன் காண்டிவத்தையே தெய்வ மாகக் கொண்டவன். அதனை இகழ்பவர் எவராயிருந்த போதிலும் கொல்லாது விடான். அதனால்தான் அதனையும் தெய்வமாக எண்ணிச் சபதம் செய்கிறான். சு. சகுனி : சூதும் பொய்யும் உருவெனக் கொண்ட துட்ட மாமன் என்று இவனை அறிமுகம் செய்து வைக்கின்றார் கவிஞர். இன்னும் ஈன மாமன் என்றும், அருளற்ற சகுனி", எமோசச் சகுனி', 'திருகு நெஞ்சச் சகுனி’, ‘தீய சகுனி", 'கள்ளச் சகுனி", என்றும் சுட்டி உரைக்கின்றார். பிறிதோர். இடத்தில், புன்தொழில் கவறதனில்-இந்தப் . புவியிசை இணையிலை எனும்புக ழான் நன்றறி யாச்சகுனி' என்று காட்டுவர். கவிஞர் மேலும் இவனைப் பேச்சில் சதுர னென்றும், வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் தன் 36. 6δις. 5. 72 : 306 37, 2.31 : 164,