பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ பாஞ்சாலி சபதம் கருத்தைப் பிறர் மனம் நோகாதபடி அவரிடம் உரைக்க வல்லவன் என்றும் காட்டுவர். குதே இவன் கற்ற வேதம். பஞ்சவர் வீரத்தைப் பெரி தென மதிப்பிட்டவன்; ஒரு பார்த்தன் கை வில்லுக்கு எதிர் ஒன்றுமில்லை என்பதை நன்கு அறிந்தவன். தன் கொள்கையை இவ்வாறு கூறுவான்: நாடும் குடிகளும் செல்வமும் எண்ணி நானிலத் தோர்கொடும் போர்செய்வார்;-அன்றி ஒடும் குருதியைத் தேக்கவோ?-தமர் ஊன்குவை கண்டு களிக்கவோ?-அந்த நாடும் குடிகளும் செல்வமும் ஒரு . நாழிகைப் போதினில் குதினால்-வெல்லக் கூடுமெனிற்பிறி தெண்ண லேன்?-என்றன் கொள்கை இது’** என்பதாக. துரியோதனன் தன் நிலையை நைந்து கூறிய போது, தான் அவனுக்கு வெற்றி தருவதாக உறுதி கூறு கின்றான். ஒர் அழகிய மண்டபம் சமைக்குமாறும் அந்த மண்டபத்தைக் காணும் வகையில் பாண்டவர்களை விருந் திற்கு அழைக்குமாறும், அப்படி வருபவர்களைத் சூதுக் கழைத்துத் துரியோதனன் கருத்தை முடிப்பதாகவும் தெரி விக்கின்றான். வண்டரை நாழிகை யொன்றிலே-தங்கள் வான்பொருள் யாவையும் தோற் றுனைப்-பணி தொண்ட ரெனச்செய் திடுவன்யான்-என்றன் சூதின் வலிமை அறிவை நீ" என்பது அவன் சூழ்ச்சியின் சாரம், اسسسسسسسسسم بسمين 38. டிெ 1. 7; 56 39. டிெ 1, 7 : 54